இன்றைய ராசி பலன் {ஏப்ரல் 05.2022}

0
288

மேஷம்

குடும்பத்தில் குதூகலமும் மகிழ்ச்சியும் தாண்டவமாட போகிறது. தொழில் தொடங்குவதற்கான புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். தேவைப்பட்டால் கடன் வாங்குவது கூட வியாபாரத்திற்கு உறுதுணையாக இருக்கும். வேலை இடங்களில் அனுசரணையான போக்கு காணப்படும். பணியில் உள்ளவர்கள் நல்ல பலன்களை காண்பார்கள். பிள்ளைகளால் பெற்றோர்களுக்கு பெருமை உண்டாகும்.

ரிஷபம்

அலைச்சலால் மனம் சற்று வேதனை அடைந்தாலும் இறுதி வெற்றி உங்களுக்குத்தான். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். நண்பர்கள் உதவியால் தொழில் மேன்மையடையும். கணவன் மனைவி உறவு சீராக இருக்கும். பிள்ளைகளால் சிலருக்கு தொல்லைகள் உண்டாகலாம். உறவினர்களின் வருகை வீட்டில் உற்சாகத்தைக் கொடுக்கும். பணவரவும் தாராளமாக இருக்கும். சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறால் சுப விரைய செலவுகள் ஏற்படும். இன்று உங்களுக்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். தேவையில்லாத செலவுகளால் கையிருப்பு குறையும். பணபற்றாக்குறையை சமாளிக்க சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை திடீர் மருத்துவ செலவுகள் வரும்.

மிதுனம்

தொட்டது துலங்கி தொழில் மேன்மை அடையும் காலகட்டம் இது.உத்தியோகத்தில் உள்ளவர்கள் உற்சாகமாக வேலை பார்ப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டு உங்களுக்கு ஊக்கம் கொடுக்கும். பங்கு பரிவர்த்தனை வியாபாரத்தில் லாபம் கொழிக்கும்.வெளிநாடுகளிலிருந்து எதிர்பாராத உதவி உங்களை தேடி வரும். புதிய வாகனங்கள் வாங்க கூடிய யோகம் உள்ளது. சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இன்று நீங்கள் எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களால் நன்மை ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். மூத்த சகோதரரின் ஆதரவு கிடைக்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

கடகம்

கொடுத்த கடன் சிக்கல் இல்லாமல் திரும்பக் கிடைக்கும். சகோதரர்கள் உதவியுடன் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். மறைமுகமாக இருந்த எதிர்ப்புகள் விலகும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து பண வரவு கிடைக்கும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். காரியத் தடைகள் அகலும். பெரிய மனிதர்களின் பழக்கத்தால் நன்மைகள் நடக்கும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். வேலையில் உற்சாகமாக செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள்.

சிம்மம்

நாமா இதை செய்தோம் என்று பெருமை படுகிற அளவுக்கு ஒரு காரியமாற்றுவீர்கள். பெண்கள் நகை துணி மணிகள் வாங்கி மகிழ்ச்சி அடைவார்கள்.பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க கூடிய வாய்ப்பு உருவாகும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து பண வரவு கிடைக்கும். குடும்பத்தில் மங்களகரமான காரியங்கள் நடைபெறும்.

கன்னி

பிள்ளைகளுக்கான கல்வி செலவுகள் கை மீறிப் போகும். பூர்வீக சொத்தில் வில்லங்கம் விலகும். நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த பகை நீங்கும். தொழில் துறைகளில் முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குழந்தைகள் இல்லாத வீட்டில் குழந்தை பாக்கியம் உண்டாகும். விருந்தினர்களின் வருகையால் வீடு கலகலப்பாக இருக்கும். பெண்களுக்கு தாய்வீட்டு சொத்தில் பங்கு கிடைக்கும்.

துலாம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்தக் காரியம் செய்தாலும் இரண்டு மடங்கு எச்சரிக்கை தேவை. பேச்சு வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். கொடுக்கல் வாங்கல் எழுத்துப்பூர்வமாக இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களில் நிதானப் போக்கை கடைபிடிக்க வேண்டும். யாரிடமும் விவாதம் செய்யாமல் இருப்பது சிறப்பு. பிள்ளைகளால் சின்ன சின்ன தொல்லைகளுக்கு ஆளாவீர்கள். கடன் கட்டுக்குள் இருக்கும். சந்திரன் இன்றைய தினம் ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். கணவன் மனைவி இடையே உற்சாகம் அதிகமாகும். இன்று குடும்பத்தில் சுப செய்திகள் தேடி வரும் மனமகிழ்ச்சி கூடும். பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நவீன பொருட்கள் வாங்க நல்ல நாளாகும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். நினைத்த காரியம் நிறைவேறும்.

விருச்சிகம்

பங்கு பரிவர்த்தனை வியாபாரத்திற்கு இது யோகமான காலம். எடுத்து வைக்கின்ற காரியங்கள் இடையூறு இன்றி நடக்கும். அடுத்தவர் உதவியால் தொழில் அமோகமாக நடைபெறும். வராக்கடன் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்கள் வருகையால் வீடு உற்சாகத்துடன் காணப்படும்.பணியில் இருப்போருக்கு பாராட்டும் பதவி உயர்வும் கிடைக்கும். சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். பணம் கடன் கிடைக்கும். வங்கி கடனுக்கு முயற்சி செய்யலாம். உடன் பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பழைய நண்பர்களின் சந்திப்பால் மன மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்வீர்கள்

தனுசு

எதிரிகளால் தொழிலுக்கு இடையூறு உண்டாகும். மறைமுக எதிர்ப்பை வெற்றிகரமாக முடிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவில் தாமதம் ஆகும். கணவன் மனைவி உறவில் சலசலப்பு உண்டாகும். பிள்ளைகளால் சிலர் அவமானங்களை சந்திக்க நேரும். தொழிலாளர்கள் கவனமுடன் பணி செய்ய வேண்டும். வெளியூர் பயணங்களால் பெரிய அனுகூலம் கிடைக்காது.

மகரம்

கார் வாங்க வேண்டுமா, கவலை வேண்டாம். இந்த வாரம் அது கைகூடி வரும். புது வீடு கட்ட பூஜை போடலாம். கூட்டுத் தொழில் அமோகமாக இருக்கும். உரிய நேரத்தில் உரிய இடத்தில் இருந்து கிடைக்கும் உதவியால் உற்சாகமடைவீர்கள். பணத்தட்டுப்பாடு நீங்கும். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பார்கள். பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான வாரம். நகைகளில் ஜொலிப்பார்கள். சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். வேலைப்பளு அதிகமாகும். இன்று குடும்பத்தில் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்ககூடும். உத்தியோக ரீதியாக செல்லும் பயணங்களில் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். கையிருப்பு குறையும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பார்த்த இடத்தலிருந்து உதவி கிட்டும். மனதில் நிம்மதி குறையும்.

கும்பம்

என்றோ செய்த உதவிக்கு இன்று பலன் கிடைக்கும். புதிய முதலீடுகள் தாராளமாக செய்யலாம். பணியாளர்கள் உற்சாகமாக வேலை செய்வார்கள். மேலதிகாரிகளின் அன்பும் அனுசரணையும் இருக்கும். போட்டி பந்தயங்களில் வெற்றி காண்பீர்கள். மாமியார் மருமகள் அன்பு மேலோங்கி நிற்கும். பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தீர்த்த யாத்திரைகள் செல்லும் வாய்ப்பு கிட்டும்.

மீனம்

எதிர்ப்புகளை தைரியமாக முறியடிப்பீர்கள். தொழில் துறைகள் சற்று ஏற்றம் இறக்கமாக இருக்கும். தொழிலில் அதிக முதலீடுகளைச் செய்ய வேண்டாம். வேலையிடத்தில் தொழிலாளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். கடன் சுமை சிலருக்கு அதிகரிக்கும். சகோதரர்களால் பிரச்சனை உருவாகலாம். உண்மையான உழைப்புக்கு ஏற்ற பலன் உண்டு. தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம்.