பெண் இராஜாங்க அமைச்சரும் பதவி விலகினார்

0
62

  இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

டாக்டர். சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய்கள் மற்றும் கோவிட் நோய் கட்டுப்பாடு இராஜாங்க அமைச்சராக பணியாற்றி இருந்தார்.

இந்நிலையில் நாட்டில் அதிகரித்து வரும் மக்கள் போராட்டங்கள் காரணமாக இவர் பதவியை இராஜினாமா செய்ததாக தெரிவித்தார். 

அதேசமயம் நாட்டின் நெருக்கடி நிலையில் அரசாங்கத்தில் உள்ள  பல முக்கியஸ்தர்கள் பதவி விலகலை அறிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.