புத்தாண்டு காலத்தில் லாஃப் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்க முடியாது! – லாஃப் எரிவாயு நிறுவனம்

0
262

பணத்தை செலுத்த முடியாத காரணத்தினால், இலங்கையில் இறக்குவதற்காக எரிவாயுடன் வந்த கப்பல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

5 ஆயிரத்து 500 மெற்றி தொன் எரிவாயுவை லாஃப் எரிவாயு நிறுவனம் வரவழைத்து இருந்தது. அரச வங்கிகள் இந்த எரிவாயுவை இறக்குவதற்கான கடன் பத்திரத்திற்கு டொலர்களை வழங்கவில்லை என்பதால், கப்பலில் இருந்த எரிவாயுவை இறக்க முடியாமல் போனதாக லாஃப் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக புத்தாண்டு காலத்தில் லாஃப் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.