மீரிஹன போராட்டத்தில் அடிப்படைவாதிகளை அவசரமாக கண்டுபிடித்த அரசாங்கம்! படைகளிடம் கோரிக்கை விடுக்கும் திருச்சபை

0
51

மிரிஹானவில் இடம்பெற்ற போராட்டங்களுக்கு அடிப்படைவாதிகளே காரணம் என்று ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கை தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள இலங்கைத் திருச்சபை, மிகக் குறுகிய காலத்திற்குள் பொறுப்பாளர்கள் எனக் கூறப்படும் தரப்பினரை அடையாளம் காண அவசரப்படுவதன் உள்நோக்கம் என்ன என கேள்வி எழுப்பியுள்ளது.

இந்தநிலையில் ஜனாதிபதியும் அரசாங்கமும் இந்தநாட்டு மக்களின் கண்ணீருக்கு செவிசாய்த்து பொறுப்பான நிர்வாகமாக தமது அடிப்படைக் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என இலங்கை திருச்சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொருளாதார மீட்சிக்கான குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட காலத் திட்டங்களை அவசர அவசரமாக வகுத்துத் தருவது அரசாங்கத்தின் கடமையாகும் என்றும் திருச்சபை குறிப்பிட்டுள்ளது.

இனம், மதம், சாதி, சமூக வர்க்கம் அல்லது அரசியல் வேறுபாடின்றி இலங்கை மக்கள் தங்கள் உயிர்வாழ்விற்காக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த தீவிரமான மற்றும் முன்னோடியில்லாத சூழ்நிலைகளுக்கு பதிலளிக்க அரசாங்கம் தவறிவிட்டது.

அத்துடன் மக்களை முற்றிலும் இருளில் வைத்துள்ளது. இப்போது பொறுமை இழந்து தவிக்கும் மக்கள் தொடர்ந்து கிளர்ந்தெழுந்து கோபத்துடன் செயல்படுவார்கள்.

இத்தகைய செயல்களை தீவிரவாத சக்திகள் மீது குற்றம் சாட்டுவது ஆபத்தான முயற்சியாகும்.

இந்த வகையான எதிர்ப்புகளை அடக்குவதற்குப் பதிலாக உரையாடல் மற்றும் ஈடுபாட்டின் பதில் தேவைப்படுகிறது.

மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதைத் தடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தேசத்தின் எரியும் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது.

இந்தநிலையில் காவல்துறை, மற்றும் ஆயுதப் படைகள் விவேகத்துடன் செயல்படுமாறு இலங்கை திருச்சபை கோரியுள்ளது.

மக்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட ஒரு சூழ்நிலைக்கு வெறுமனே பதிலளிப்பதால், அனைத்து பொறுப்புள்ள அரச அதிகாரிகளும் இந்த நேரத்தில் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.

பொது மக்களின் அழுகை செவிடான காதுகளில் விழாது. எனினும்;, எமது மக்களின் வலிகளை திறந்த கண்களால் பார்க்கமுடியும் என்றும் திருச்சபை தெரிவித்துள்ளது