ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

0
60

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இன்று மாலை 6.00 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 6.00 மணி வரை, பாதுகாப்பு அல்லது பொது பாதுகாப்பு செயலாளர்களின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி, பொது வீதி, பூங்கா, பொழுதுபோக்கு இடங்கள், மைதானங்கள், புகையிரத நிலையங்கள், கடற்கரையோரங்களில் தேவையற்ற விதத்தில் நடமாடுவதனை தடை செய்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 6 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.