பாகுபலி 1 பட வசூலை முழுவதும் முறியடித்துள்ள RRR படம்- செம வசூல் வேட்டையில் படம்

0
619

எஸ்.எஸ்.ராஜமௌலி பிரம்மாண்ட படங்களை இயக்குவதில் வல்லவர். தனது அப்பா விஜயேந்திர பிரசாத் கதை எழுதி தர அதை பிரம்மாண்ட படமாக எடுத்து சாதனை செய்கிறார்.

அப்படி அவர் இயக்கிய படங்களில் ரசிகர்கள் பிரம்மிப்பாக பார்த்தது பாகுபலி 1 மற்றும் RRR திரைப்படம்.

பாகுபலி 1 மற்றும் RRR

பாகுபலி படம் ஒரு சாதாரண கதை தான். ஆனால் அதை பிரம்மாண்டமாக இயக்கி, மக்கள் அசந்து பார்க்கும் வகையில் சில விஷயங்களை படத்தில் வைத்து மக்களை ஈர்த்தவர் ராஜமௌலி.

பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா, சத்யராஜ், நாசர் என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளார்கள். 180 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் உலகம் முழுவதும் ரூ. 650 கோடி வரை வசூல் சாதகை செய்தது.

அதேபோல் இப்போது ராஜமௌலி இயக்கிய RRR திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. 300ல் இருந்து 350 கோடி வரை படத்தின் பட்ஜெட் என கூறப்படுகிறது.

பாகுபலியை முந்திய RRR

கடந்த மார்ச் 24ம் தேதி வெளியான RRR திரைப்படம் செம வசூல் வேட்டை நடத்தி வருகிறார். இதுவரை உலகம் முழுவதும் ரூ. 650 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம்.

இதன்மூலம் பாகுபலி 1 பட சாதனையை முறியடித்துள்ளது RRR திரைப்படம்.