தொடர்ச்சியாக மின் விநியோகம் வழங்கப்படவுள்ள ஜனாதிபதி மாளிகை!

0
34

ஜனாதிபதி மாளிகை மற்றும் நாடாளுமன்றிற்கு தொடர்ச்சியாக மின்சாரம் விநியோகிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுதந்திர வர்த்தக வலயங்கள், மின்சார நிலையங்களை அண்டிய பகுதிகள், கைத்தொழில் பேட்டைகள் உள்ளிட்ட நாட்டின் 191 இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இந்த 191 இடங்களுக்கு மின்சாரத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மின்சாரக் கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களின் மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.