தனது மகனின் கியூட் புகைப்படத்தை வெளியிட்ட சஞ்சீவ்-ஆல்யா மானசா ஜோடி

0
34

சீரியல் பிரபலங்கள் தான் இப்போது மக்களின் பேவரெட் பிரபலங்களாக இருக்கிறார்கள். தொடர்கள் சீரியல்கள் ஒளிபரப்பாக கொரோனா காலத்தில் இருந்து வெள்ளித்திரையை விட சின்னத்திரை பிரபலமாகிவிட்டது.

சஞ்சீவ்-ஆல்யா ஜோடி

விஜய்யில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடர் மூலம் பிரபலமான சஞ்சீவ்-ஆல்யா ஜோடி 2019ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். பின் இவர்களுக்கு 2020ம் ஆண்டு ஐலா என்ற பெண் குழந்தை பிறந்தார்.

அதன்பிறகு ஆல்யா மானசா ராஜா ராணி 2 தொடரில் நடித்து வர சஞ்சீவ் காற்றின் மொழி தொடர் நடித்து முடித்துவிட்டு கயல் என்ற புதிய தொடரில் நடித்து வந்தார்.

ஆல்யாவிற்கு பிறந்த மகன்

இரண்டாவது முறையாக கர்ப்பமான ஆல்யாவிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 26) ஆண் குழந்தை பிறந்தது. தங்களது மகனுக்கு அவர்கள் அர்ஷ் என்றும் பெயர் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் சஞ்சீவ்-ஆல்யா ஜோடி தங்களது மகனின் கியூட்டான கதையை புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.