உக்ரைனுக்கு ரஷ்யா அளித்துள்ள மறைமுக ஆயுத உதவி… வெளியாகியுள்ள சுவாரஸ்ய தகவல்

0
323

ஷ்யா கைப்பற்றிய உக்ரைன் நகரங்களை மீண்டும் மீட்டுக்கொள்ளும் உக்ரைன் படைகளுக்கு ரஷ்யா மறைமுகமாக உதவியுள்ளது என்றே கூறலாம்.

உதாரணமாக, Kyiv நகருக்கு 40 மைல்கள் கிழக்கில் அமைந்துள்ள Rudnytske என்ற சிறு கிராமத்தை உக்ரைன் படைகள் ரஷ்ய படைகளிடமிருந்து மீட்டன. அங்கே ரஷ்யர்கள் உக்ரைன் வீரர்களுக்காக பெரிய பரிசு ஒன்றை விட்டுச் சென்றிருந்தார்கள்.

ஆம், மூன்று tankகள் மற்றும் ஆயுதம் தாங்கிய கனரக வாகனம் ஒன்றையும் அவர்கள் விட்டுச் சென்றிருந்தார்கள்.

அதேபோல, தலைநகரின் மறு பக்கத்தில், ரஷ்யப் படைகள் ஆக்கிரமித்திருந்த Irpin நகரையும் உக்ரைன் படைகள் மீட்டன. அங்கும் BMD-4M என்னும் ரஷ்ய இராணுவத்தின் புகழ் பெற்ற போர் வாகனம் ஒன்றை ரஷ்யப் படைகள் விட்டுச் சென்றிருந்தன.

ஏற்கனவே, ரஷ்யப் படைகள் விட்டுச் சென்ற tankகளை உக்ரைன் விவசாயிகள் தங்கள் ட்ராக்டர்கள் உதவியுடன் கைப்பற்றும் புகைப்படங்கள் வெளியானது நினைவிருக்கலாம்.  

ஆக, தற்போது, ரஷ்யப் படைகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களையே ரஷ்யர்களுக்கெதிராக பயன்படுத்தத் துவங்கியுள்ளது உக்ரைன்.

ரஷ்யப் படைகள் விட்டுச் சென்ற சில ஆயுதங்கள் சிறிது பழுதடைந்திருப்பதால், அவற்றை பழுதுபார்ப்பதற்கென்றே உக்ரைன் தொழிற்சாலைகள் இரவும் பகலும் இடைவிடாமல் இயங்கி வருவதாக உக்ரைன் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

எங்களுக்குக் கொஞ்சம் ஆயுதங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆனால், ரஷ்யர்கள் எங்களுக்கு ஏராளம் ஆயுதங்களை வழங்கிவருகிறார்கள் என்கிறார், Rudnytske கிராமத்தை மீட்பதற்காக உக்ரைன் வீரர்களுடன் இணைந்து போராடிய வெளிநாட்டு வீரர்கள் குழுவின் தலைவரான Mamuka Mamulashvili என்பவர்.

உக்ரைனியர்கள், ரஷ்யர்கள் விட்டுச் சென்ற, குறைந்தபட்சம் 120 tankகள் உட்பட, கிட்டத்தட்ட 1,000 இராணுவ உபகரணங்களை கைப்பற்றியுள்ளதாக Yuri Butusov என்னும் உக்ரைன் இராணுவ ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.  

அவற்றில் பல நல்ல நிலைமையில் இருப்பதாகவும், சிலவற்றில் சிறிதளவே பழுது உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் அவர்.

ஆக, ரஷ்யர்களின் ஆயுதங்களைக் கொண்டே அவர்களைத் தாக்குகிறோம் என்கிறார்கள் உக்ரைன் வீரர்கள்.

இன்னொருபக்கம், ரஷ்யாவும் உக்ரைன் ஆயுதங்கள் சிலவற்றைக் கைப்பற்றியுள்ளதால், அவர்களும் இதேபோல் பெருமையடித்துக்கொள்வதாகவும் கூறப்படுகிறது.