உக்ரைனிலிருந்து ராணுவ படைகளை குறைப்பதாக ரஷ்யா கூறியது வெறும் வாய் வார்த்தையா?..

0
381
<> on March 2, 2014 in Perevanie, Ukraine.

கீவில் படைகள் குறைக்கப்படுவதாக ரஷ்ய அரசு அறிவித்திருப்பது ஏமாற்றும் செயல் என பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி (John Kirby) தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கிடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர துருக்கி விரும்பியது. அந்நாட்டின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவு எட்டப்படவில்லை.

இதற்கிடையே, இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை இஸ்தான்புல் நகரில் நேற்று நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின்போது உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் செர்னிகிவ் நகரில் இராணுவ நடவடிக்கையை மிகத் தீவிரமாக குறைப்பதாக ரஷ்யா தெரிவித்தது.

இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து ரஷ்ய படைகள் திரும்பப் பெறப்படவில்லை. இடமாற்றம் தான் செய்யப்படுகிறது என ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.