உக்ரைனின் போர்க்களத்தின் கொடூரத்தன்மை!

0
303

உக்ரைனின் போர்க்களத்தில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் நாள்தோறும் புகைப்படங்களும் காணொளிகளும் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

அவற்றில் போரின் கொடூரத்தன்மையை காணமுடிகிறது. ரஸ்ய படையினர் நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக லட்சக்கணக்கான உக்ரைனியர்கள் இதுவரை இடம்பெயர்ந்தும், புலம்பெயர்ந்தும் சென்றுள்ளனர்.

இதனையும் தாண்டி நாட்டுப்பற்று மற்றும் பல்வேறு காரணங்களால் வீடுகளை விட்டு செல்லமுடியாதவர்கள் போரின் தாக்கங்களுக்கு உள்ளான சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

அகதி முகாமிலும் தமது வளர்ப்பு நாயுடன் இருக்கும் சிறுமி, வீடு ஒன்றில் கைவிடப்பட்ட நாயுடன் உக்ரையன் படை வீரர், தமது உறவை இழந்த பெண், ரஸ்யாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வாகனம், கைக்குழந்தையுடன் அகதியாகியுள்ள பெண், ரஸ்யர்களின் தாக்குதல்களால் எரிண்டுள்ள எண்ணெய் குதம்,  டபிளினில் வைக்கப்பட்டுள்ள போர் எச்சரிக்கை என்பன இங்கு காட்டப்படுகின்றன.