வாத்தி படத்தில் தனுஷுடன் நடிக்கும் அவரின் மகன் !

0
35

தனுஷின் அடுத்தடுத்த படங்கள் 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள தற்போது வாத்தி, நானே வருவேன் என இரண்டு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் கூட இயக்குனர் செல்வராகவன் தனுஷ் நானே வருவேன் படத்தின் புதிய போஸ்டர்களை வெளியிட்டு இருந்தார்.

தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நானே வருவேன் ஷூட்டிங்கை தொடர்ந்து தனுஷ் விரைவில் வாத்தி பட ஷூட்டிங்கில் இணையவுள்ளார். வாத்தி பட ஷூட்டிங்கை முழுமையாக முடித்த பின்பே மீண்டும் நானே வருவேன் ஷூட்டிங்கில் தனுஷ் இணைவாராம். 

வாத்தி படத்தில் இவரா !

இந்நிலையில் தற்போது வாத்தி திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் தனுஷின் ரீல் நடிகராக அசுரன் படத்தில் நடித்த கென் கருணாஸ், வாத்தி படத்திலும் நடிக்கவுள்ளாராம்.

வாத்தியாராக நடிக்கும் தனுஷிற்கு பள்ளி மாணவர்களில் ஒருவராக கென் கருணாஸ் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.