யாழில் ஆலய உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது!

0
39

யாழ்ப்பாணம் – வண்ணார் பண்ணையில் உள்ள இரண்டு ஆலயங்களில் நேற்று (28) இரவு உண்டியலை உடைத்து பணம் திருடிய சந்தேக நபரை மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரிடமிருந்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பணம் மற்றும் வெளிநாட்டு குற்றிகள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆலயம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமரா பதிவை வைத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதையடுத்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.