மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி நபர்! தள்ளுபடி செய்யப்பட்ட மேல்முறையீடு

0
172

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி நபரின் மேல்முறையீட்டை சிங்கப்பூர் அரசாங்கம் தள்ளுபடி செய்துள்ளது.

நாகேந்திரன் தர்மலிங்கம் என்ற இளைஞரே இவ்வாறு மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள நிலையில், அவரின் மேல்முறையீட்டை சிங்கப்பூர் அரசாங்கம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த நாகேந்திரன் தர்மலிங்கம் கடந்த 2009ம் ஆண்டு சிங்கபூருக்கு 42.72 கிராம் போதைப்பொருளை கடத்தியபோது கைது செய்யப்பட்டார். இது குறித்த விசாரணையின் போது போதைப்பொருள் கடத்தியது உறுதி செய்யப்பட்டதால் 2010ம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

இதை எதித்தது 2011ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. எனினும், உயர்நீதிமன்றத்தில் அவரது மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்பின் 2019ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

உச்சநீதி மன்றிலும் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதபின் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பியுள்ளார். ஜனாதிபதி கருணை மனுவை திருப்பி அனுப்பியுள்ளார். இந்த நிலையில், மரண தண்டனைக்கு எதிராக சிங்கப்பூர் அரசிடம் முறையீடு செய்தார்.

ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தர்மலிங்கத்தின் மனுவை விசாரித்தது. அப்போது, தர்மலிங்கத்தின் முறையீடு எங்கள் அரசியலமைப்புக்கு எதிராக அப்பட்டமானது மற்றும் நீதிமன்ற துஷ்பிரயோகம்’’ எனத் தெரிவித்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தர்மலிங்கம் சார்பில் மரண தண்டனையை நிறுத்தி வைத்து மனநல குழுவை கொண்டு மதிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மேல்முறையீட்டு மனு உண்மை மற்றும் சட்ட அடிப்படையில் இது தகுதியற்றது, அடிப்படையற்றது என தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.