நடுவானில் ரஷ்ய போர் விமானத்தை தவிடுபொடியாக்கிய உக்ரைன்!

0
44

 ரஷ்ய போர் விமானத்தை உக்ரைன் படை சுட்டு வீழ்த்திய வீடியோ வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது தொடர்ந்து 35வது நாளாக படையெடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ் மீதான தாக்குதலை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

எனினும், மரியுபோல், கெர்சன் மற்றும் கார்கிவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கீவ் நகரின் தென் மேற்கில் உள்ள Zhytomyr பகுதியில் ரஷ்ய போர் விமானத்தை உக்ரைன் படை சுட்டு வீழ்த்தியுள்ளது.

இணையத்தில் வெளியாக வீடியோவில், Zhytomyr வான்வெளியில் சுடப்பட்ட கரும்புகையுடன் விமானம் ஒன்று தரையை நோக்கி விழுகிறது.

மார்ச் 30ம் திகதி நிலவரப்படி உக்ரைன் மீதான படையெடுப்பில் ரஷ்யா 135 போர் விமானங்கள் மற்றும் 133 ஹெலிகாப்டர்களை இழந்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.