தொடருந்து கட்டணங்கள் 58 வீதத்தினால் அதிகரிக்கப்படலாம்! போக்குவரத்து அமைச்சர் தெரிவிப்பு

0
211

நாட்டில் தொடருந்து கட்டண திருத்தத்தின் போது கட்டணங்கள் 58 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama)  தெரிவித்துள்ளார்.

அதன்படி, முதல் 10 கிலோமீற்றருக்கு, கிலோமீற்றருக்கு ஒரு ரூபாய் 30 சதமாக இருந்த மூன்றாம் வகுப்பு தொடருந்து கட்டணம் இரண்டு ரூபாயாக அதிகரிக்கப்படும் எனவும் அதற்கமைய 10 கிலோமீற்றருக்கான டிக்கெட்டின் விலை இருபது ரூபாயாக உயரும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அண்மைக்காலமாக நான்கு தடவைகள் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் தொடருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.