தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக கோட்டாபய வழங்கியுள்ள உறுதிமொழி!

0
33

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைக் காண்பதாகத் தெரிவித்துள்ளார்.

அதன் ஒரு கட்டமாகவே தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதாக அவர் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் கூறியுள்ளார்.

மேலும் அரசியல் தீர்வு, காணி விடுவிப்பு, கைதிகள் விடுதலை உள்ளிட்ட ஐந்து விடயங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முதல்கட்டமாகப் பேசியுள்ளேன். இந்தப் பேச்சுக்குப் பல தரப்பிலிருந்தும் வரவேற்புக் கிடைத்துள்ளது. பேச்சுக்கள் தொடரும் என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலைநேர செய்திகளின் தொகுப்பு,