ஜனாதிபதி தலைமையில் பிம்ஸ்டெக் மாநாட்டின் இரண்டாம் நாள் அமர்வு!

0
214

கொழும்பில் நடந்து வரும் பிம்ஸ்டெக் மாநாட்டின் இரண்டாம் நாள் அமர்வு சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ளது.

ஏழு உறுப்பு நாடுகள் பங்கேற்கும் பிம்ஸ்டெக் மாநாடு கொழும்பில் நடந்து வருகிறது.

இந்நிகழ்வில் பங்குபற்றுவதற்க்காக பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் கடந்த வார இறுதியில் இலங்கை வந்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதவேளை, இன்றைய மாநாட்டிற்கு கோட்டாபய தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாநாடு நேற்றைய தினம் கொழும்பில் ஆரம்பாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது