சன் பிக்சர்ஸ் – விஜய் இடையே இதுதான் பிரச்சனையா?

0
228

விஜய்யின் பீஸ்ட் படத்தை தயாரித்து இருக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது வரை படத்தின் ப்ரோமோஷனை தொடங்காமல் இருக்கிறது.

நெல்சனின் ‘நாளை’ ட்விட்

பீஸ்ட் படத்தை இயக்கி இருக்கும் நெல்சன் தான் “நாளை” என ஒரு ட்விட்டை போட்டிருந்தார். அதனால் பீஸ்ட் டீஸர் தான் வரப்போகிறது என ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி ஆனார்கள்.

ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது வரை ஒரு பதிவு கூட போடவில்லை. அதனால் ஏதேனும் அரசியல் நெருக்கடிகள் இருக்கிறதா என கேள்வி எழுந்திருக்கிறது.

இது தான் பிரச்சனை?

சன் பிக்சர்ஸ் மற்றும் விஜய் இடையே என்ன தான் பிரச்சனை என விசாரித்ததில் பல்வேறு தகவல்கள் சினிமா வட்டாரத்தில் பரவி வருவது தெரிந்தது. பீஸ்ட் படத்தின் கடைசி அவுட்புட் பார்த்துவிட்டு சன் பிக்சர்ஸ் திருப்தி அடையவில்லை, அதனால் தான் இப்படி என ஒரு தகவல் பரவி வருகிறது.

மேலும் கேஜிஎப் 2 ரிலீஸ் ஆவதால் பீஸ்ட் ரிலீஸ் தேதியை ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் தள்ளி வைக்கலாம் என சன் பிக்சர்ஸ் கேட்டபோது விஜய் ‘தேதியை மாற்ற வேண்டாம்’ என கூறிவிட்டாராம். இதனால் தான் சன் பிக்சர்ஸ் கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. 

ஏற்கனவே அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்கள் சரியாக போகாததால் சன் பிக்சர்ஸ் இந்த பீஸ்ட் படத்தின் வசூலில் எந்த பாதிப்பும் வர கூடாது என நினைப்பதாக தெரிகிறது. அதனால் தான் கேஜிஎப் 2 உடன் மோதலை தவிர்க்க நினைப்பதாகவும் கூறப்படுகிறது.