கொழும்பு வைத்தியசாலையின் ஆய்வுகள் பாதிப்பு!

0
248

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மருத்துவ உபகரணங்களின் தட்டுப்பாடு காரணமாக ஆய்வகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், பற்றாக்குறையை நீக்குவதற்கு தேவையான இருப்புகளை வழங்குவதற்கான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலைமையினால் தற்போழுது வைத்தியசாலையில் ஆய்வகங்கள் குறைந்த அளவிலேயே நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.