ஐ.ஓ.சியிடம் இருந்து டீசல் கொள்வனவு செய்ய தீர்மானம்!

0
204

இந்தியாவிடமிருந்து டீசலை பெற்றுக்கொள்ளும் வரை ஐ.ஓ.சியிடமிருந்து டீசல் கொள்வனவு செய்து விநியோகிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்த வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதேவேளை, தற்பொழுது கையிருப்பில் இருக்கும் டீசல் மின்னுற்பத்திக்கும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் வாகனங்களுக்கு மாத்திரமே வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.