உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சியின் இயந்திரங்களாக மாறியுள்ள வங்காள விரிகுடா பிராந்திய பொருளாதாரங்கள்!

0
31

சிறிலங்காவில் இன்று மூன்றாவது நாளாக நடைபெற்ற பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை உரையாற்றினார். 

பிம்ஸ்டெக் என்று அழைக்கப்படும் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா முன்முயற்சியின் 5 ஆவது மாநாடு உறுப்புநாடுகளைச் சேர்ந்த உயரதிகாரிகளின் பங்கேற்புடன் நேற்று முன்தினம் திங்கட்கிழமை கொழும்பில் ஆரம்பமானது.

இம்மாநாட்டில் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் தலைவர்கள் மெய்நிகர் ஊடாக பங்கேற்றிருந்தனர்.

இன்று அரச தலைவர்களுக்கான மாநாடு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், மாநாட்டை ஆரம்பித்து உரையாற்றிய கோட்டாபய ராஜபக்ஷ கருத்துத் தெரிவிக்கையில், 

பயங்கரவாதம், மத அடிப்படைவாதம் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தல்களிலிருந்து பிம்ஸ்டெக் பிராந்தியத்தைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

வங்காள விரிகுடா பிராந்திய பொருளாதாரங்கள் உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சியின் இயந்திரங்களாக மாறியுள்ளதாகவும் அரச தலைவர் கோட்டாபய இதன்போது தெரிவித்தார்.