இலங்கையில் ஆடைகளின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

0
183

இலங்கையில் தைத்த ஆடைகளின் விலைகள் சுமார் 40 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக அகில இலங்கை சிறு கைத்தொழிலாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நிலுக்ஸ குமார தெரிவித்துள்ளார்.

டொலர் பற்றாக்குறை, மின்சாரத் தடை மற்றும் மூலப்பொருள் தட்டுப்பாடு போன்றவற்றின் காரணமாக இவ்வாறு தைத்த ஆடைகளின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறிப்பாக மஹரகம – பமுனுவ பகுதியில் புத்தாண்டுக் காலத்தில் 200 – 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட தைத்த ஆடைகள் தற்பொழுது 800 தொடக்கம் 1000 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

தைத்த ஆடைகளை உற்பத்தி செய்யப் பயன்படும் மூலப்பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 600 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்ட நூல் இன்று 1800 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய நேரிட்டுள்ளது. சிறு ஆடை உற்பத்தி நிலையங்கள் மின்சாரத் தடையினால் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.