18 வயது இளம் நடிகையை ரொமான்ஸ் செய்யும் சூர்யா! பாலா பட ஹீரோயின் இவர்தான்

0
66

நடிகர் சூர்யா சமீபத்தில் தான் வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட்டில் கலந்துகொண்டார். அதனை தொடர்த்து தற்போது அவரது 41வது படத்தின் ஷூட்டிங் தொடங்கி இருக்கிறது.

சூர்யா 41

இயக்குனர் பாலா மற்றும் சூர்யா இருவரும் 15 வருடங்களுக்கு பிறகு கூட்டணி சேரும் படம் தான் சூர்யா 41. இந்த படத்தின் ஷூட்டிங் இன்று கன்னியாகுமரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் சூர்யா இரண்டு ரோல்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒரு கதாபாத்திரத்தில் சூர்யா மீனவராக நடிப்பதாக கூறப்படுகிறது. கன்னியாகுமரியில் ஷூட்டிங்கிற்காகவே ஒரு கிராமம் செட் போடப்பட்டு இருக்கிறது.

ஹீரோயின்

ஜிவி பிரகாஷ் தான் இந்த படத்தின் இசையமைப்பாளர் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். மேலும் ஹீரோயினாக தெலுங்கு நடிகை கிரித்தி ஷெட்டி நடிக்கிறார்.

18 வயதாகும் கிரித்தி ஷெட்டி தற்போது இளைஞர்களை அதிகம் கவர்ந்த சென்சேஷன் நடிகையாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

கிரித்தி ஷெட்டி