தன் படத்தின் மோசமான விமர்சனத்தால் கண்ட்ரோல் மீறி உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளான விஜய்

0
211

தளபதி விஜய்

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்.

இவர் தான் இன்றைய தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகர் என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மெர்சல், சர்கார், பிகில், மாஸ்டர் என்று அனைத்து படங்களும் ரூ 200 கோடி வசூலை தாண்டியது.

இந்நிலையில் விஜய் ஒரு காலக்கட்டத்தில் மிகவும் மனம் நொந்து இருந்தார். அவர் நடிப்பில் வெளியான அழகிய தமிழ் மகன், குருவி ஆகிய படங்கள் படுதோல்வி அடைந்தது.

வில்லு தோல்வி

அந்த நேரத்தில் வில்லு படத்தை விஜய் ஜேம்ஸ் பாண்ட் படம் போல் நினைத்து நடித்தார். ஆனால், படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை, அதோடு அந்த படத்தை எதிர் தரப்பு ரசிகர்கள் கலாய்க்கவும் ஆரம்பித்தனர்.

இதனால், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் விஜய் தன் கண்ட்ரோல் மீறி மிக கோபமாக கத்தினார்.

சத்தம் அதிகமாக வந்ததற்கு அவர் கத்திருந்தாலும், விஜய்க்கு வில்லு தோல்வி அந்த சமயத்தில் மிகப்பெரும் கோபத்தை ஏற்படுத்தியதாம்.

விஜய் அன்றிலிருந்து பத்திரிகையாளார் சந்திப்பில் முடிந்த அளவிற்கு வார்த்தையை விடாமல் இருந்துவரை, ஒரு கட்டத்தில் இந்த சந்திப்பையே நிறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.