இலங்கையை சர்வதேச கமூகம் கைவிட்டதா ? தம் கருத்துக்களை கூறும் முக்கிய அரசியல்வாதிகள்

0
30

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற ஆசனம் பிரதமர் ஆசனமாக இருக்கலாம் என அந்த கட்சியின் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க நாட்டைக் கைப்பற்றினால், 48 மணி நேரத்திற்குள் அனைத்து நாட்டில் தற்போது இருக்கும் வரிசை யுகத்திற்கு முடிவுகட்டப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தற்போதைய ஆட்சியின் மீதான சர்வதேச நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளதாகவும், சர்வதேச சமூகம் நம்பக்கூடிய ஆட்சி இலங்கையில் நிறுவப்பட்டவுடன் சர்வதேச சமூகம் உதவும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்கும் அளவுக்கு தமது கட்சியில் எவருக்கும் மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக தாம் நினைக்கவில்லை என அமைச்சர் ரோஹித அபேவர்தன குணவர்தன ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.