அதிகரிக்கும் ரயில் கட்டணங்கள்! ஏப்ரல் 1ஆம் திகதிக்குப் பின்னர் நடைமுறை

0
180

ரயில் கட்டணங்களை உயர்த்துவதற்கு அமைச்சரவை இன்று (28) அனுமதி வழங்கியதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஏப்ரல் 1ஆம் திகதிக்குப் பின்னர் ரயில் கட்டணங்களைத் திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார்.

மேலும், கட்டண திருத்தம் குறித்து அறிக்கை தயாரிக்குமாறு ரயில்வே பொது மேலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் கவனம் செலுத்தி கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

கட்டணத்தை அறிவித்ததன் பின்னர், புகையிரத திணைக்களம் கட்டணங்களை ஊடகங்கள் ஊடாக விளம்பரப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.