விஜய் பெரிய ஸ்டார், இது மோதல் இல்லை.. கேஜிஎப் 2 நடிகர் யாஷ்

0
587

விஜய்யின் பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் 13 தேதி ரிலீஸ் ஆகிறது. அதற்கு மறுநாளே யாஷ் நடித்து இருக்கும் கேஜிஎப் 2 படம் வெளியாகிறது.

மோதல்

கேஜிஎப் 2 மற்றும் பீஸ்ட் ஆகிய இரண்டு படங்களில் ஒரு நாள் இடைவெளியில் ரிலீஸ் ஆனாலும் சினிமா ரசிகர்கள் அதை பெரிய மோதலாகவே பார்க்கின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை கேஜிஎப் 2 படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் யாஷ், சஞ்சய் தத் உட்பட படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர்.

பீஸ்ட் மோதல் பற்றி யாஷ்

பத்திரிகையாளர்கள் கேள்விக்கு யாஷ் பதில் அளித்து கொண்டிருக்கும்போது ஒருவர் விஜய்யின் பீஸ்ட் உடன் நடக்கும் மோதலை எப்படி சமாளிப்பீங்க என கேள்வி எழுப்பினர்.

“இரண்டு படங்கள் ரிலீஸ் ஆனால் அது ‘பீஸ்ட் & கேஜிஎப்2’ தான் ‘பீஸ்ட் vs கேஜிஎப் 2’ அல்ல. இது எலக்ஷன் அல்ல. எல்லோரிடமும் ஒரே ஒரு ஓட்டு தான் இருக்கும், அதை அதிகம் பெறுபவர் வெற்றி பெறுவார். ஆனால் இது சினிமா. இரண்டு படங்களையும் பார்க்கலாம்.”

“அவர் சினிமாவுக்காக நிறைய செய்து இருக்கிறார். அவர் எனக்கு சீனியர். விஜய் சார் மீது அதிகம் மரியாதை இருக்கிறது. பீஸ்ட் படத்தை நிச்சயம் நான் பார்ப்பேன். அதே போல விஜய் ரசிகர்கள் கேஜிஎப் 2 படத்தை நிச்சயம் பார்பார்கள்.”இவ்வாறு யாஷ் கூறி இருக்கிறார்.