இலங்கையில் கடுமையான வெப்பகாலம்! மருத்துவரின் முக்கிய அறிவித்தல்

0
24

இலங்கையில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக சிறு பிள்ளைகள் மருத்துவ சிகிச்சைக்கு செல்லும் நிலை காணப்படுவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத இறுதியில் மற்றும் ஏப்ரல் தொடக்கத்தில் சூரியன் உச்சம் கொடுத்து வெப்பநிலையை 32 முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை உயர்த்துகிறது.

அதிக வெப்பநிலை காரணமாக சிறுபிள்ளைகளுக்கு நீரிழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க, அவர்களுக்கு அதிக நீர் பருக கொடுக்குமாறும், ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிக்க வைக்குமாறும் மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் நேற்றைய தினம் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. 33.8 டிகிரி செல்சியஸாக வெப்பம் பதிவாகியுள்ளது.  அனுராதபுரத்தில் 33.5 செல்சியஸ், புத்தளத்தில் 32.5 செல்சியஸ், கொழும்பில் 32.5 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இதேவேளை, இரத்தினபுரி, அநுராதபுரம், யாழ்ப்பாணம், மன்னார், கண்டி மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் இன்று 30 செல்சியஸிற்கு மேல் வெப்பநிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.