“இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகபோகின்றது..” சர்வதேச நாணய நிதியம் எச்சரிப்பு

0
509
Image processed by CodeCarvings Piczard ### FREE Community Edition ### on 2018-01-30 10:02:43Z | http://piczard.com | http://codecarvings.com

இலங்கை பொருளாதாரம் பெரும் எதிர்கொள்ள வேண்டிய சூழலில் உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.

ஒரு காலத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த இலங்கை, தற்போது 70 ஆண்டுகளில் இல்லாத வகையிலான பொருளாதார சீரழிவை சந்தித்து வருகிறது.  சமையலுக்கான எரிவாயுவில் தொடங்கி மின்வெட்டு வரை மக்கள் சந்திக்காத இன்னல்களே இல்லை எனலாம்.  உணவு, மருந்து, உடை உட்பட அனைத்துப் பொருள்களின் விலையும் கட்டுப்பாடில்லாமல் ஏறிக்கொண்டிருக்கிறது. அரசின் விலைக் கட்டுப்பாட்டு அதிகார சபை செயலிழந்துவிட்டதால் எந்தப் பொருளையும் எந்த விலைக்கும் விற்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், அதிகப்படியான கடன் மூலம் இலங்கை, தற்போது solvency பிரச்னையை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதாவது கையில் இருக்கும் சொத்துக்களின் மதிப்பை விட அதிகமாகக் கடன் பெற வேண்டி சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.