ஆளும் கட்சியின் பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் முரண்பாடு

0
510

அரசாங்கத்தின் பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் மீண்டும் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆளும் கட்சியின் பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்கனவே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்ததுடன் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் தலையிட்டு அதனை தீர்த்து வைத்தனர்.

இந்த நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சில பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படையாக கருத்துக்களை வெளியிட்டு வருவதால் மீண்டும் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலைமை காரணமாக பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.