பெங்களூரைச் சேர்ந்த பெண்ணின் சாதனை!

0
444

பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே பாக்குநீரிணையை முதன்முதலாக நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்த தொழில் முறை நீச்சல் வீராங்கனையான சுஜேத்தா கடந்த புதன் அன்று காலை 8.23 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல் முனையிலிருந்து நீந்த தொடங்கி 10 மணி 9 நிமிடங்கள் நீந்தி தலைமன்னாரை அடைந்தார். தொடர்ந்து அங்கிருந்து மறுபுறமாக தனுஷ்கோடிக்கு நீச்சல் அடித்துக் கொண்டு சென்றார்.

மறுநாள் அதிகாலை 2:09 மணியளவில் சர்வதேச கடற்பரப்பை தாண்டி வரும் போது சுஜேத்தாவை ஜெல்லி மீன்கள் கடித்ததால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து நீந்த முடியாமல் நீச்சலை முடித்தார்.

தொடர்ந்து 17 மணிநேரம் 34 நிமிடங்கள் 42 கிலோமீட்டர் தூரம் வரை கடலில் நீந்திய அவர், இதன் மூலம் தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கு முதன் முதலாக நீந்திச் சென்றவர் என்ற சாதனையையும், ,பாக்குநீரிணையை நீந்திக் கடந்த நான்காவது பெண் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

இதேவேளை மும்பையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான 13 வயது சிறுமி கடந்த வாரம் இதே சாதனையை படைத்தமை குறிப்பிடத்தக்கது.