ஜேர்மனியில் அரசு பல்கலைக்கழகங்களில் மட்டுமே கல்வி இலவசம்: ஏனைய பல்கலைக்கழகங்களில் கட்டணம் வசூலிக்கப்படும்

0
414

கடந்த சில ஆண்டுகளாக, வெளிநாடுகளில் கல்வி கற்க விரும்பும் மாணவர்களின் விருப்பத் தேர்வாக ஜேர்மனி உருப்பெற்றுள்ளது. 

ஏன் அதிக அளவில் மாணவர்கள் ஜேர்மனிக்குச் சென்று கல்வி கற்க விரும்புகிறார்கள்?

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் சில ஜேர்மனியில் உள்ளன என்பது மட்டுமின்றி, ஜேர்மனியில் இலவசமாக கல்வி கற்கலாம் என்பதும், மாணவர்கள் ஜேர்மனியை அதிகம் விரும்புவதற்கு காரணமாகும்.

எந்த பல்கலைக்கழகங்களில் எல்லாம் இலவச கல்வி வழங்கப்படுகிறது?

ஜேர்மனியில் அனைத்து பொதுப்பல்கலைக்கழகங்கள் அல்லது அரசு பல்கலைக் கழகங்களிலும் (public universities) கல்வி இலவசம்!

சுமார் 300 பல்கலைக்கழகங்கள் 1,000 கல்வித் திட்டங்களை இலவசமாக வழங்கி வருகின்றன.

ஜேர்மனியின் அரசு பல்கலைக்கழகங்களின் பெயர்கள் சில இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.

  • University of Cologne
  • Ludwig Maximilians University Munich (LMU)
  • Goethe University Frankfurt
  • RWTH Aachen University
  • University of Münster Ruhr
  • University Bochum
  • University of Duisburg-Essen
  • Universität Hamburg
  • FAU Erlangen-Nürnberg Technical
  • University of Munich (TUM)
  • University of Würzburg

ஆனாலும், சில விதிவிலக்குகளும் உள்ளன…

அரசு பல்கலைக்கழகங்களில் மட்டுமே கல்வி இலவசம். ஜேர்மனியிலுள்ள சுமார் 100 தனியார் பல்கலைக்கழகங்களில் ஒன்றில் நீங்கள் கல்வி கற்பீர்களானால், நீங்கள் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும். அந்தக் கட்டணம் பிரித்தானியா போன்ற நாடுகளில் வசூலிக்கப்படும் கட்டணத்துக்கு இணையாக இருக்கலாம்.

Baden-Württemberg மாகாணத்திலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு, ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத மற்றும் ஐரோப்பிய பொருளாதார மண்டலத்தைச் சேராத நாடுகளிலிருந்து வரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கலாம் என அனுமதியளிக்கப்பட்டுள்ளது.