உக்ரைன் போரில் ரஷ்யா பரபரப்பு அறிக்கை: முதல் கட்ட நடவடிக்கை முடிந்தது என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பு

0
323
MOSCOW, RUSSIA - JULY 17, 2020: A building of Russia's Ministry of Defence in Frunzenskaya Naberezhnaya Street. Mikhail Tereshchenko/TASS Ðîññèÿ. Ìîñêâà. Çäàíèå Ìèíèñòåðñòâà îáîðîíû ÐÔ íà Ôðóíçåíñêîé íàáåðåæíîé. Ìèõàèë Òåðåùåíêî/ÒÀÑÑ

உக்ரைனில் ரஷ்ய இராணுவ நடவடிக்கையின் முதல் கட்டம் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளதாகவும், கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தை முழுமையாக “விடுதலை” செய்வதில் கவனம் செலுத்துவதாகவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போர் தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது, ஆனால் ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் சளைக்காமல் பதில் தாக்குதல் கோட்னுத்துவரும் நிலையில், ரஷ்யா அதன் வரையறுக்கப்பட்ட இலக்குகளை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பதை இந்த அறிவிப்பு காட்டுகிறது.

ரஷ்ய செய்தி நிறுவனங்கள் பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி, ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் இப்போது உக்ரைனின் லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் 93 சதவீத பகுதிகளையும், டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் 54 சதவீத பகுதிகளையும் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளதாகக் கூறியது. இந்த இரண்டு பகுதிகளும் கூட்டாக Donbass என உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், முற்றுகையிடப்பட்ட உக்ரேனிய நகரங்களைத் தாக்குவதை நிராகரிக்கவில்லை என்றும், உக்ரைன் மீது வான்வெளியை மூடும் எந்தவொரு முயற்சிக்கும் ரஷ்யா உடனடியாக பதிலளிக்கும் என்றும் அமைச்சகம் கூறியது.

உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்திய மேற்கு நாடுகள் ரஷ்யாவின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

இருப்பினும், ரஷ்யப் படைகள் நிர்ணயிக்கப்பட்ட பணிகளை முடிக்கும் வரை இந்த நடவடிக்கை தொடரும் என்று பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை கூறியது.