வெள்ளை முடி பிரச்சனைக்கு இயற்கையான முறையில் தீர்வு!

0
228

இன்றைய காலக்கட்டத்தில் சிறு வயதிலேயே முடி வெள்ளையாவது அல்லது வலுவிழப்பது என்பது மிகவும் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. இப்பிரச்னையை தவிர்க்க, மக்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பல வித ரசாயனங்கள் கலந்த பொருட்களை தலைமுடியில் பயன்படுத்தி, நரைமுடி-யை கருப்பாக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் இதனால் முடி பலவீனமாவது தான் மிச்சம். மற்ற எந்த பயனும் கிடைப்பதில்லை.

இந்நிலையில், இயற்கையான முறையில் தலைமுடியை கருப்பாக்க உதவும் முறைகள் நமக்கு வரப்பிரசாதமாக அமைகின்றன. அப்படிப்பட்ட ஒரு முறையை பற்றி இந்த பதிவில் காணலாம். 

பல இயற்கை பொருட்கள் நரை முடியை கருப்பாக்க உதவுகின்றன. அதில் உருளைக்கிழங்கும் ஒன்றாகும். உருளைக்கிழங்கு தோலைப் பயன்படுத்தி, கூந்தலில் கருமையை மீண்டும் கொண்டு வரலாம். புதிய முடி வளரவும் இது உதவுகிறது. இதன் மூலம், உங்கள் தலைமுடி இயற்கையாகவே கருப்பாக மாறி, முடியின் நிறம் மீண்டும் வரும்.

உருளைக்கிழங்கில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் : உருளைக்கிழங்கு மற்றும் அதன் தோலில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இதனால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி, வைட்டமின் பி-6, பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் ஃபோலேட் ஆகியவை இதில் கணிசமான அளவில் காணப்படுகின்றன.

உருளைக்கிழங்கு தோலைக் பயன்படுத்தி ஹேர் மாஸ்க் செய்யலாம் : உருளைக்கிழங்கு தோலைக் கொண்டு ஹேர் மாஸ்க் செய்ய முதலில் உருளைக்கிழங்கின் தோலை எடுத்துவிடவும். இந்த தோல்களை குளிர்ந்த நீரில் போட்டு கொதிக்க வைக்கவும். 10 நிமிடங்கள் கொதித்த பிறகு, இந்த தண்ணீரை முழுமையாக குளிர்விக்கவும். இந்த தண்ணீரை ஒரு ஜாடியில் கொட்டி மூடி வைக்கவும்.  

இதை எப்படி தலையில் பயன்படுத்துவது? உருளைக்கிழங்கு தோலின் இந்த நீரை உச்சந்தலையில் தடவி 5 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்து சிறிது நேரம் அப்படியே விட்டு விடுங்கள். இந்த உருளைக்கிழங்கு தண்ணீரை உங்கள் தலைமுடி-யில் 30 நிமிடங்களுக்கு அப்படியே இருக்க விடவும். அதன் பிறகு குளிர்ந்த நீர் கொண்டு கழுவி விடவும்