விசேட அதிரடி படையினரால் மரக்கடத்தல் முறியடிப்பு

0
51

வவுனியா – தவசிக்குளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் முதிரை மரக்குற்றிகளை கடத்தி சென்ற வாகனம் மடுக்கந்தை விசேட அதிரடிப்படையினரால் மடக்கிப்பிடிக்கப்பட்டு நெளுக்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது இன்று (26) அதிகாலை இடம்பெற்றதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரகசிய தகவலின் அடிப்படையில் மடுக்கந்தை விசேட அதிரடிப்படையினரால் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மேலும் இக்கடத்தலில் ஈடுபட்ட ஒமந்தை, கூமாங்குளம், தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த மூவரைக் கைது செய்ததுடன், கடத்தலிற்குப் பயன்படுத்திய கப் ரக வாகனம் மற்றும் 10 முதிரை மரக்குற்றிகள் என்பன கைப்பற்றப்பட்டு நெளுக்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

 இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.