ரம்யா பாண்டியனை முதல் நாளே அசிங்கப்படுத்திய சாண்டி, தீனா! Bigg Boss Ultimate லேட்டஸ்ட் ப்ரோமோ

0
58

பிக் பாஸ் அல்டிமேட் ஷோவில் தற்போது தீனா மற்றும் சாண்டி ஆகியோர் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்திருக்கின்றனர்.

போட்டியாளர்கள் சரியாக விளையாடததால் பிக் பாஸ் அல்டிமேட்டில் சுவாரசியம் குறைவாக இருக்கிறது என தொடர்ந்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் வனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி போன்றவர்கள் இடையில் வெளியேறிவிட்டனர்.

வைல்டு கார்டு

வைல்ட் கார்டு எண்ட்ரியாக அனுப்பப்பட்ட KPY சதிஷ், ‘எனக்கு இந்த ஷோவே புரியவில்லை’ என தற்போது வரை கூறி வருகிறார். தொடர்ந்து ஷோ சுவாரசியம் குறைவாக சென்றுகொண்டிருக்கும் நிலையில் தான் விஜய் டிவி தீனா மற்றும் சாண்டி ஆகியோரை வைல்டு கார்டு எண்ட்ரியாக அனுப்பி இருக்கின்றனர்.

இதனால் வரும் நாட்களில் சுவாரஸ்யம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அசிங்கப்பட்ட ரம்யா பாண்டியன்

இந்நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டில் ஒரு டாஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது. அதில் தீனா மற்றும் சாண்டி முன்பு ஒவ்வொரு போட்டியாளராக நின்று தங்களை பற்றி நல்ல விஷயங்களை சொல்ல வேண்டும். அதை வைத்து அவர்கள் இருவரும் ஏலம் கேட்க வேண்டும் என சொல்லப்பட்டது.

ஐபில் ஏலம் போல இந்த ஏலம் நடைபெற்றது. ஒவ்வொரு போட்டியாளராக வந்த நிலையில் ரம்யா பாண்டியன் வந்த போது அவரது அழகை பற்றி அவரே வர்ணித்து கொண்டார். இதனால் டென்சன் ஆன சாண்டி மற்றும் தீனா இருவரும் ‘ரம்யா பாண்டியனை நீயே ஏலம் எடுத்துக்கொள்’ என மாறி மாறி சண்டை போட்டுக்கொண்டனர்.