கண்டியில் எரிவாயு சிலிண்டர்களை வாங்கும் வரிசையில் ஏற்பட்ட மோதல்!

0
53

கண்டியில் எரிவாயு சிலிண்டர்களை வாங்கும் வரிசையில் ஏற்பட்ட மோதலில் பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் பொதுமக்கள் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த மோதலில் பொதுமக்களைத் தாக்க மரக் கட்டைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் போது பொலிஸ் அதிகாரியும் காயமடைந்தார் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

கண்டியில் உள்ள லிட்ரோ எரிவாயு விநியோக நிலையத்திற்கு அருகில் பொதுமக்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

எரிவாயு சிலிண்டர்களை பெறுவதற்காக நேற்றுமுன்தினம் இரவு முதலே ஏராளமானோர் வரிசையில் நின்று கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் வரிசையில் நின்ற மக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் கற்களாலும் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சிலர் இரத்த காயங்களுடன் சிகிச்சை பெற சென்றுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.