கடந்த வாரத்தில் மாத்திரம் 733 டெங்கு நோயாளர்கள்

0
499

நாட்டில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த வாரத்தில் மாத்திரம் 733 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அதன் வைத்தியர் அதிகாரி இந்திக வீரசிங்க தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் 613 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்தனர். அதனுடன் ஒப்பிடுகையில், கடந்த வாரம் நோயாளர்களின் எண்ணிக்கை 120 ஆல் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமது சுற்றுச்சூழலை சுத்தம் செய்வது தொடர்பில் ஆலோசனைகள் தேவைப்படின், அது தொடர்பாக தமது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களில் பெற்றுக் கொள்ள முடியும் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் வைத்திய அதிகாரி இந்திக வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை கருத்திற் கொண்டு, 47 சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்கள், டெங்கு நோய் அவதானம் கூடிய பிரதேசங்களாக பெயரிடப்பட்டுள்ளது. அதில் 18 பிரதேசங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாகவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.