உக்ரைனிலிருந்து அகதியாக வெளியேறி சாதனை படைத்த குடும்பபெண்!

0
414

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பால் தனது 11 வயது மகளுடன் இஸ்ரேலில் அகதியாக தஞ்சம் புகுந்த பெண் ஒருவர், ஜெருசலேமில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றார்.

தடகள வீராங்கனையான வெலன்ரீனா வெரேட்ஸ்கா, 2 மணிநேரங்கள் 45 நிமிடங்கள் 54 நொடிகள் ஓடி, மாரத்தானில் வெற்றி பெற்றார்.

31 வயதான இவர், ரஷ்ய படையெடுப்பு ஆரம்பமான பின்னர் போலந்து சென்று, பின்னர் இஸ்ரேலில் தஞ்சம் புகுந்தார். ஆனால், அவருடைய கணவர் இன்னும் உக்ரைன் இராணுவத்தில் பணிபுரிந்துவருவதாக, மாரத்தான் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

ஜெருசலேமில் நடைபெற்ற மாரத்தானில் பங்கேற்ற 40 உக்ரைனியர்களில் இவரும் ஒருவர். பருவத்திற்கு மாறான மழை மற்றும் குளிருக்கு இடையில் இவர் மாரத்தானில் ஓடியுள்ளார்.

உக்ரைனுக்கு இஸ்ரேல் மனிதநேய உதவிகளை அனுப்பியுள்ளது. ஆனால், இராணுவ உதவி வழங்குவதற்கோ அல்லது ரஷ்யாவுக்கு எதிராக தடைகளை விதிப்பதற்கோ இஸ்ரேல் மறுத்துவருகிறது