அதிகரித்தது உணவுப்பொதிகளின் விலை ! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

0
644

இலங்கையில் உணவுப்பொதிகளின் விலைகள் எவ்வளவிற்கு அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் சிற்றுணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கூறுகையில்,எரிவாயு விலை உயர்வு மற்றும் மின்சார நெருக்கடி காரணமாக உணவுப் பொதிகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தன.

சந்தையில், முட்டை மற்றும் கோழி இறைச்சி என்பனவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளமையால், உணவுப் பொதியின் விலை மேலும் உயர்வடைந்துள்ளன.

தற்போது எரிவாயு கொள்கலனை 4000 மற்றும் 5000 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக உணவுப் பொதிகளின் விலைகள் அதிகரித்துள்ளன.கோழி இறைச்சி உணவுப் பொதியின் விலை 300 ரூபாவாகவும், மீன் உணவுப் பொதியின் விலை 250 ரூபாவாகவும், முட்டை உணவுப் பொதியின் விலை 240 ரூபாவாகவும், மரக்கறி உணவுப் பொதியின் விலை 220 ரூபாவாகவும் அதிகரித்துள்ளன.

இவ்வாறான நிலையில் வடையும், தேநீரும் சிற்றுணவகங்களின் பிரதான விற்பனை பொருட்களாக மாறியுள்ளன.அத்துடன், பராட்டாவும் அதிகளவில் விற்பனையாகின்றது என குறிப்பிட்டுள்ளார்.