மயக்கம் என்ன நடிகை ரிச்சாவா இது?

0
51

மயக்கம் என்ன படம் மூலம் தமிழ் மக்களால் கொண்டாடப்பட்ட பெரிய அளவில் வரவேற்கப்பட்ட நடிகை ரிச்சா.

நடிகை ரிச்சா

அதன் பிறகு சிம்புவுடன் ஒஸ்தி படத்தில் நடித்திருந்தார். தமிழை தாண்டி தெலுங்கில் 6 படங்களும் பெங்காலியில் ஒரு படமும் நடித்திருக்கிறார். அவ்வளவு தான் பின் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.

இவர் தனது கல்லூரி நண்பர் ஜியோ லங்கேலா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு கடந்த வருடம் மே மாதம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

ரிச்சா இன்ஸ்டா பக்கத்தில் எப்போதும் அழகிய புகைப்படங்களை பதிவிட்ட வண்ணம் இருப்பார். அண்மையில் அவர் தனது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படத்தை பதிவிட அதைப்பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

மயக்கம் என்ன படத்திற்கும் இப்போது பார்ப்பதற்கும் ஆளே வேறொருவர் போல் உள்ளார். ரசிகர்களும் என்ன ஆளே மாறிவிட்டார் என ஷாக்கிங் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.