பேச்சு என்ற பெயரில் நாம் ஏமாறத் தயாரில்லை- இரா.சம்பந்தன் !

0
31

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் அர்த்தபுஷ்டியான பேச்சுக்கு நாம் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தெரிவித்துள்ளார். 

பேச்சு என்ற பெயரில் நாம் ஏமாறத் தயாரில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே சம்பந்தன் குறித்த விடயத்தை கூறியுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற விடயத்தில் நாம் உறுதியாகவுள்ளோம்.

அதன்பிரகாரம் ஆக்கபூர்வமான பேச்சை ஜனாதிபதி முன்னெடுத்தால் அதற்கு முழு ஒத்துழைப்பை நாம் வழங்குவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.