உக்ரைன் திரையரங்கின் மீது ரஷ்யாவின் தாக்குதல்! 300 பேர் கொல்லப்பட்டனர்

0
39

உக்ரைனின் தெற்கு நகரமான மரியுபோலில் கடந்த வாரம் இடம்பெற்ற திரையங்கு மீதான விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 300ஆக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இடிபாடுகள் மற்றும் இடைவிடாத எறிகனை தாக்குதல்கள் காரணமாக இந்த தாக்குதலின் இறப்பு எண்ணிக்கை இதுவரை கணிப்பிடப்படவில்லை.

இந்தநிலையில், போர் காரணமாக, நூற்றுக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்திருந்த திரையரங்கின் மீது ரஷ்ய படையினர் நடத்திய எறிகனை தாக்குதலில் சுமார் 300 பேர் இறந்திருக்கலாம் என்று உக்ரைன் அதிகாரிகள் இன்று அறிவித்துள்ளனர்.

எனினும் இந்த திரையரங்கு மீதான தாக்குதலை ரஷ்யா மறுத்துள்ளது..

இந்தநிலையில் ரஷ்ய விமானத்தின் தாக்குதல்களைத் தொடர்ந்து மரியுபோல் நாடக அரங்கில் சுமார் 300 பேர் இறந்ததாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.