இலங்கை வரலாற்றில் முதன்முறையாக தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்

0
38

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் கடுமையாக உயர்ந்து வருவதாக கொழும்பு தங்க உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது சந்தையில் தங்கத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், கொழும்பு செட்டியார்தெருவில் 24 கரட் தங்கத்தின் விலை இன்று 167,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதேவேளை, 22 காரட் தங்கம் இன்றைய தினம் 154,500 ரூபாயாக பதிவாகியுள்ளது.

இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக தங்கத்தின் விலை பாரிய அதிகரிப்பை பதிவு செய்த முதல் சந்தர்ப்பம் இதுவென உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி மிகவும் வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளும் அதிகரித்து வருகின்றது. 

இன்றைய நிலவரப்படி கறுப்பு சந்தையில் டொலர் ஒன்றின் விற்பனை விலை 350 ரூபாவை அண்மித்துள்ளதுடன், வர்த்தக வங்களில் 290 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.