தென் மாகாணத்தில் அதிக நேர மின்வெட்டு! காரணம் என்ன?

0
361

தென் மாகாணத்தில் ஏனைய பகுதிகளை விட அதிக நேரம் மின்வெட்டுகளை நடைமுறைப்படுத்துவதற்கான காரணம் குறித்து இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க(Janaka Rathnayake) விளக்கமளித்துள்ளார்.

மின்சாரம் கடத்தும் பாதையில் உள்ள பிரச்சினையின் காரணமாகவே தென் மாகாணத்தில் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும் போது அதிகளவிலான மின்வெட்டுகளை நடைமுறைப்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.

இப்பிரச்சினை தொடர்பாக  இலங்கை மின்சார சபைக்கு கொழும்பில் மின்சாரத்தை உற்பத்தி செய்து அதனை தென்மாகாணத்திற்கு அனுப்ப முடியாது என பொது பயன்பாட்டு ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

இந்த நிலைமையை சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இப்பிரச்சினையை நிவர்த்தி செய்யும் நோக்கில், தனியார் மின் நிலையங்களில் இருந்து மின்சார அலகுகள் கொள்வனவு செய்யப்பட்டு தென் மாகாணத்திற்கு வழங்க இருப்பதாகவும்  தலைவர் குறிப்பிட்டார்.