புகையிரதக்கட்டணத்தில் ஏற்பட்ட அதிகரிப்பு!

0
45

மலையகம் மற்றும் வடக்கு நகரங்களுக்கு இடையிலான புகையிரத மார்க்கங்களின் ஆசன முன்பதிவு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகப் புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய நேற்று நள்ளிரவு முதல் இந்தக் கட்டண அதிகரிப்பு நடைமுறைக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து கண்டிக்கு புதிய கட்டணமாக முதலாம் வகுப்பிற்கு 1,000 ரூபாவும், 2ஆம் வகுப்பிற்கு 500 ரூபாவும், 3ஆம் வகுப்பிற்கு 300 ரூபாவுமாக கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.