கிளிநொச்சியில் கார் ஒன்றும் டிப்பர் வாகனமும் மோதி விபத்து!

0
46

கிளிநொச்சி நகரின் ஏ 9 வீதியில் கார் ஒன்றும் டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து இன்று காலை 9 மணியளவில் கந்தசுவாமி ஆலயம் முன்பாக இடம்பெற்றுள்ளது.

சொகுசு கார் வீதியின் மறுபக்கத்திற்கு கடக்க முற்பட்ட போது யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பர் மோதியுள்ளதால் விபத்தில் சிக்கிய கார் பலத்த சேதமடைந்துள்ளது.

எனினும் காரில் பயணித்த சிரேஷ்ட சட்டத்தரணி சிவபாலசுப்ரமணியம் தெய்வாதீனமாக எவ்வித பாதிப்புமின்றி தப்பித்தார்.