அகதிகள் முகாமில் வசித்து வந்த இலங்கை பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை

0
174

கொட்டாரம் அருகே உள்ள பெருமாள்புரம் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

38 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, “குறித்த அகதிகள் முகாமில் வசித்து வந்த பெண்ணுக்கு 11 ஆண்டுகளுக்கு முன் திருமணம் இடம்பெற்றுள்ளது.

இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லாத நிலையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், சம்பவ தினமும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் மனமுடைந்த குறித்த பெண் கணவர் வெளியே சென்ற நிலையில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் குறுித்து கன்னியாகுமரி பொலிஸார் விசாரணைகளை முன்னெத்துள்ளனர்.