புடினுடன் நேரடியா பேச தயார்; அதிபர் ஜெலன்ஸ்கி!

0
358

உக்ரைனிய அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) ரஷ்ய அதிபர் புடினுடன் நேரடியாக பேசத்தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் வலுப்பெற்றுவரும் நிலையில், அதிபர் ஜெலன்ஸ்கி, தொலைக்காட்சி சேவை ஒன்றிற்கு பேட்டி அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நேட்டோ அமைப்பைப் பொறுத்தமட்டில் எங்களை என்ன செய்வது என்று தெரியாத மேற்கத்திய நாடுகள், பாதுகாப்பு உத்தரவாதங்களை விரும்பும் உக்ரைன்,

நேட்டோ விரிவாக்கத்தை விரும்பாத ரஷ்யா என அனைத்து தரப்பினருக்குமான ஒரு சமரசம் இது.

புடினை நான் சந்திக்காதவரையில், ரஷ்யா போரை நிறுத்த விரும்புகிறதா என்பதைப் புரிந்துகொள்ள முடியாது.

போர் நிறுத்தத்திற்குப் பிறகு ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளின் பிடியில் உள்ள கிரீமியா, கிழக்கு டான்பாஸ் ஆகியவற்றின் நிலை, பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்க தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.